கடைசி நேரத்தில் கைவிரித்த மருத்துவர்கள்! பரிதாபமாக உயிரை விட்ட சாப்ஃட்வேர் பெண்! 

 

கடைசி நேரத்தில் கைவிரித்த மருத்துவர்கள்! பரிதாபமாக உயிரை விட்ட சாப்ஃட்வேர் பெண்! 

தமிழகத்தில் எல்லா முயற்சிகளையும், நல்ல விஷயங்களையும் அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருந்து வருகிறார்கள். பக்கத்து வீடுகளில் ஏதேனும் சோகம் நிகழ்ந்தால் தான் அதன் தாக்கத்தைப் புரிந்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் எல்லா முயற்சிகளையும், நல்ல விஷயங்களையும் அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருந்து வருகிறார்கள். பக்கத்து வீடுகளில் ஏதேனும் சோகம் நிகழ்ந்தால் தான் அதன் தாக்கத்தைப் புரிந்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசுமே சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஏதேனும் ஒரு பெரிய பாதிப்பு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, யாரேனும் உயிரை விட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ராக்கிங் பிரச்சனைகளில் நாவலரசு படுகொலை செய்யப்பட்டது, ஈவ் டீஸிங்கில் எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா உயிரிழந்தது, பேனர் விவகாரங்களில் சுபஸ்ரீ மரணமடைந்தது, ஆழ்துளை கிணறுகளில் சுஜித் உயிரிழந்தது என்று ஒரு உயிரை பலி வாங்கியப் பிறகு தான் தமிழக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறது.

dengue

தற்போது தமிழகம் முழுவதும் மழைக்காலங்கள் துவங்கி விட்டதை அடுத்து, கொசுக்களும் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழகம் முழுவதுமே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பம் முதலே முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபடலாம் என்று அரசு விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வரும் செல்வபாரதி, தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றார். அங்கு காய்ச்சல் வந்ததும் மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் விடாது போகவே அருகில் உள்ள மருத்துமனைக்குச் சென்றார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தார்.

selva bharthi

செல்வ பாரதிக்கு காய்ச்சல் வந்ததும் தானாகவே மாத்திரை எடுத்துக் கொண்டுள்ளார். முதலிலேயே சிகிச்சை எடுக்காததால் டெங்கு பாதிப்பு மூன்றாவது கட்டத்தை எட்டி விட்டதால்,  ரத்த ஓட்டம் தடைப்பட்டு மூளை வரை சென்றதால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். மழை காலங்களில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் கசாயம் அருந்துவது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.