கடைசி நேரத்தில் அனில் அம்பானி சிறைக்கு செல்வதை தடுத்த முகேஷ் அம்பானி: எப்படி தெரியுமா?

 

கடைசி நேரத்தில் அனில் அம்பானி சிறைக்கு செல்வதை தடுத்த  முகேஷ் அம்பானி: எப்படி தெரியுமா?

எரிக்சன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி செலுத்த வேண்டிய  ரூ.453 கோடி கடனை அவரது சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளார்.

மும்பை: எரிக்சன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி செலுத்த வேண்டிய  ரூ.453 கோடி கடனை அவரது சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளார்.

கழுத்தை நெருக்கும் கடன்:

ambani ttn

அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ரூ.46,000 கோடி அளவுக்குக் கடன் வைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன. ரூ. 25,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க முயன்றும் பல்வேறு காரணங்களால் விற்க முடியவில்லை.

எரிக்சன் வழக்கு:

ambani ttn

இதுவரை சொத்துகளை விற்க முடியாததால், ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனம் மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. மேலும், தங்களுக்கான ரூ.550 கோடி கடன் பாக்கியை திருப்பி கொடுக்க உத்தரவிடுமாறும் எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை:

sc

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எரிக்சன் நிறுவனத்திற்குப் பணத்தைத் திருப்பி செலுத்தாத அனில் அம்பானி குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை 4 வாரத்தில் தர உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஒருவேளை பணத்தை கொடுக்க தவறும்பட்சத்தில் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

நெருக்கடியில் உதவிய சகோதரர்:

ambani brothers ttn

இந்நிலையில், அவருக்கு அளித்த கெடு இன்றுடன் (19-ம் தேதி) முடிவடைய இருந்தது.  இதையடுத்து, அனில் அம்பானி, நீதிமன்றம் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா அல்லது சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது.  இதனை எரிக்ஸன் நிறுவனமும் உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ‘நன்றிக்கடன் பட்டுள்ளேன்’

நெருக்கடியான சூழலில் எரிக்சன் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையைச் சகோதரருக்காக முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சகோதரர் முகேஷ் அம்பானிக்கும், அவரது  மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.  இது குறித்து பேசியுள்ள அனில் அம்பானி, ‘நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு  மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.