கடைசி உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக களமிறங்கும் கேப்டன் கூல்! சாதிப்பாரா? சறுக்குவாரா?

 

கடைசி உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக களமிறங்கும் கேப்டன் கூல்! சாதிப்பாரா? சறுக்குவாரா?

ஐபிஎல். ஒரு நாள் கிரிக்கெட், 20- 20 என கிரிக்கெட்டின் வடிவங்கள் மாறினாலும் கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் வீரர்கள் மீதுமுள்ள மோகம்  ரசிகர்களிடையே குறையவில்லை. ஐபிஎல்- இலில் கைவிட்ட கோப்பையை உலகக்கோப்பையில் பெறுவோம் என மார்த்தட்டி அலைகின்றனர் மஞ்ச சொக்கா காரர்களின் தீவிர ரசிகர்கள்..

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது. ஐபிஎல். ஒரு நாள் கிரிக்கெட், 20- 20 என கிரிக்கெட்டின் வடிவங்கள் மாறினாலும் கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் வீரர்கள் மீதுமுள்ள மோகம்  ரசிகர்களிடையே குறையவில்லை. ஐபிஎல்- இலில் கைவிட்ட கோப்பையை உலகக்கோப்பையில் பெறுவோம் என மார்த்தட்டி அலைகின்றனர் மஞ்ச சொக்கா காரர்களின் தீவிர ரசிகர்கள்.. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பையை பார்க்க இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் காத்துக்கிட்டிருக்கு… 

msd

உலகக்கோப்பையின் மீது அப்படி என்ன அலாதி பிரியம் என்ற சந்தேகம் தோன்றலாம்.  இதற்கு காரணம் 1983-ல் நடந்த உலகக்கோப்பை. 1983ல் நடந்த உலகக்கோப்பையின்போது இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது. யாரும் நினைக்காத வண்ணம் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வலிமையான மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. அதன்பிறகு ஒரே இரவில் சூப்பர் ஸ்டாரானார் கபில்தேவ். 

ss

2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் கேப்டனாக தோனி உருவெடுத்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தார். அதன்பிறகு ஐசிசி கோப்பை, பல டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிப்பெற்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 

ss
தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. அவர் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்போவதில்லை என்பதால், அவருடைய இந்த நான்காவது உலகக் கோப்பையே, கடைசியாகவும் இருக்கும். கேதர் ஜாதவ், ஷிகர் தவான் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பையில் ஆடுவதும் சந்தேகம்தான். கடைசி உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக களமிறங்கும் தோனி, பீல்டிங்கின்போது கோலிக்கு சில வெற்றி ரகசியங்களை கற்றுக்கொடுத்து அணியை பலப்படுத்த அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி  பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் தோனியின் பங்கு இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.