கடைசில ‘கோவணம்’ கூட மிஞ்சாது போல; உங்க அந்தரங்கத்தை ஐடி நிறுவனங்கள் எப்டி களவாடும் தெரியுமா?

 

கடைசில ‘கோவணம்’ கூட மிஞ்சாது போல; உங்க அந்தரங்கத்தை ஐடி நிறுவனங்கள் எப்டி களவாடும் தெரியுமா?

பேஸ்புக், கூகுளில் மூழ்கிக் கிடப்பவர்கள் தங்களது அந்தரங்க விவரங்களை எந்த யோசனையும் இல்லாமல் வாரி இறைக்கின்றனர். குடும்ப விஷயங்கள்கூட சளைக்காமல் பதிவு செய்யப்படுகின்றன.

கணினி மையம் ஆனாலும் ஆச்சு! எல்லா இடத்திலும் டெக்னாலஜி உபகரணங்கள் பயன்பாடு பெருகிவிட்டது. இதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அந்தரங்க விஷயங்களை ஐ.டி. நிறுவனங்கள் எப்டியெல்லாம் பயன்படுத்துகின்றன என்று அறிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்.

fingerprint

பெட்டிக்கடை முதல் கார்ப்பரேட் அலுவலகம் வரை அலுவலகப் பதிவு எலக்ட்ரானிக் மயமாகிவிட்டது. வாசலில் ஒரு பச்சை நிறத்தில் மினுக்கிக் கொண்டிருக்கும் ஒரு சின்ன பாக்ஸ் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும். அதில் ஊழியர்கள் தங்களது ரேகையை பதிவு செய்தால் அட்டெண்டன்ஸ் விழுந்து விடும். புதிதாக அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் தங்களது முகத்தைக் காட்டினால்தான் போன் வேலை செய்யும். சில மாடல்களில் கைரேகையை தேய்த்தால் வேலை செய்யும்.

cards

வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சேவை உதவி தொடர்பு எண்ணில் வாடிக்கையாளர்களின் குரலைக்கேட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. முக்கிய விமானநிலையங்களில் டிக்கெட் பதிவுக்கு முக அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் எங்கு பார்த்தாலும் சிசிடிவி ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை கண்டறிந்து குற்றங்கள் தடுக்கப்படுகின்றன.

பேஸ்புக், கூகுளில் மூழ்கிக் கிடப்பவர்கள் தங்களது அந்தரங்க விவரங்களை எந்த யோசனையும் இல்லாமல் வாரி இறைக்கின்றனர். குடும்ப விஷயங்கள்கூட சளைக்காமல் பதிவு செய்யப்படுகின்றன. எல்லா விவரங்களும் இந்த நிறுவனங்களின் கையில் இப்போது.

facebook

வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகள் உங்களது ஜிமெயிலுக்கு அனுப்புகின்றன. உங்களது ஹெல்த் ரிப்போர்ட்களை மருத்துவமனைகள் அனுப்புகின்றன. டிராவல்  நிறுவனங்கள் உங்கள் டிக்கெட், பயண விவரங்களை தருகின்றன.

கூகுள் மேப் பயன்படுத்துவோர் எங்கு செல்கிறார்கள், இப்போதைய இருப்பிடம் என்ன என்ற விவரங்களை தருகின்றனர். கூகுள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி யூடியூபில் நீங்கள் நுழைந்தால் நீங்கள் இன்டர்நெட்டில் எந்த வகையான செய்திகள், விடியோக்களைப் பார்க்கிறீர்கள் என்பது அக்குவேறு ஆணிவேராக கூகுளுக்குத் தெரிந்துவிடும். பலான மேட்டர் பார்ப்பவர்களே உஷார்!

whatsapp

பேஸ்புக்கில் லைக் போடுபவர்கள் தங்களது விருப்பங்கள், அவரது நண்பர்களின் பழக்கவழக்கங்கள், என்ன மாதிரியான உடைகளை விரும்புகிறீர்கள், எங்கெல்லாம் செல்கிறீர்கள், செல்கிறார்கள் என்ற அனைத்து விஷயங்களையும் பேஸ்புக் அள்ளிக்கொண்டுவிடும். பேஸ்புக்கை நடத்திவரும் அதே நிறுவனம்தான் வாட்ஸ் அப்பையும் நடத்துகிறது. இதில் பல கோடிக்கணக்கானோர் பல்வேறு விஷயங்களை விவாதித்தும் பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த விவரங்களும் பேஸ்புக் கையில். ஆனால் இந்த விவரங்கள் எல்லாம் தங்களுக்கு எதுவுமே தெரியாது என அப்பிராணி முகம் காட்டுகிறது பேஸ்புக்.

நீங்கள் எந்த மாதிரியான பொருள்களை விரும்பி வாங்குகிறீர்கள் என்பது அமேசானுக்குத் தெரியும். இது தவிர, நெட்ஃபிளிக்ஸ், புக் மை ஷோ, அமேசான் பிரைம் நிறுவனங்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறீர்கள், உங்களது மனப்போக்கு என்ன என்பதை உங்கள் மனநல டாக்டரைக் காட்டிலும் நன்றாக அறிந்து வைத்திருக்கும்.

onlinefood

ஸ்விக்கி, ஸொமாடோ உங்களது உணவுப் பழக்கத்தை புட்டுப்புட்டு வைத்து விடும். பேடிஎம், பே போன், கூகுள் பே போன்ற பேமெண்ட் வேலட் நிறுவனங்களுக்கு உங்களது பண இருப்பு, எந்த விஷயத்துக்காக எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும்.

உங்களது ஸ்மார்ட் போனில் ஏற்கெனவே லோடு செய்யப்பட்டிருக்கும் சில ஆப்ஸ்கள் உங்களது தொடர்பு எண்கள், மெசேஜ்களை உங்கள் அனுமதி கேட்டு கண்டறிவதுடன், உங்களது தனிப்பட்ட எல்லா புகைப்படங்களையும் தரவிறக்கம் செய்து கொண்டுவிடும். அதில் 1 சதவீதத்தை நீங்கள் இறந்தபின் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுவிடும். 

இப்படி உங்களது அனைத்து அந்தரங்க விஷயங்களும் இதுபோன்ற எல்லா விஷயங்களையும் இந்த ஐ.டி. நிறுவனங்கள் நம்மிடமிருந்து கறந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வரும்காலத்தில் அதை எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொண்டுவிடும்.

அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் உங்கள் வீட்டுக்குள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மனதில் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளும், நினைவுகளும் மட்டுமே உங்களது அந்தரங்கமாக ஆகி விடும்.

aadharcard

இந்த அவலநிலை ஏற்படக்கூடாது என்றால் அதைத் தடுப்பதற்கான ஆயுதம் இந்திய அரசிடமே உள்ளது. எல்லா தனிப்பட்ட விஷயங்களையும் கைரேகை உள்பட ஆதார் எண் அட்டைக்காக அரசு பதிவு செய்கிறது. இந்த விவரங்கள் திருடப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? ஆதார் விவரங்களை பதிவு செய்த நிறுவனமே அவற்றை பல்வேறு வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு களவாடி விற்றதாக செய்திகள் வெளியாகின.

எனவே ஆதார் போன்ற அனைத்து அந்தரங்க விவகாரங்களை பதிவு செய்யும் நிறுவனங்கள் அதை எக்காரணம் கொண்டு வெளியிடவோ, பகிர்ந்து கொள்ளவோ அனுமதிக்காத கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பதே இதற்குரிய ஒரே தீர்வாகும்.