கடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

 

கடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அட்லீ- விஜய் காம்போவில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைந்து உருவாகிவரும் திரைப்படம் தளபதி 63. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்டு உருவாகும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறர். 

மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுயடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் படத்தின் அப்டேட் வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தளபதி 63 பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை நேற்று மாலை வெளியிட்டது. 

இந்தநிலையில் படத்தின் ஆடியோ உரிமத்தைப் பிரபல சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அட்லீ-விஜய் காம்போவில் வெளியான மெர்சல் படத்தின் ஆடியோ உரிமத்தை இந்த நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.