கடும் தட்டுப்பாடு எதிரொலி: சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

 

கடும் தட்டுப்பாடு எதிரொலி: சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்க படாததால், இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்க படாததால், இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே, இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி விற்கின்றனர்.  குறிப்பிடபட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

sanitizer

வங்காளதேசம் உள்பட பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் இருந்து சானிடைசர்களை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் உள்நாட்டில் தேவை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக சானிடைசர் கிருமி நாசினியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.