கடும் குடிநீர் பஞ்சம்; விலங்குகள் பருகும் நீரை குடிக்கும் கிராம மக்கள்!

 

கடும் குடிநீர் பஞ்சம்; விலங்குகள் பருகும் நீரை குடிக்கும் கிராம மக்கள்!

ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் எம்.பி.,-யான ஜெய் பிரகாஷ் நாராயன் யாதவின் மக்களவை தொகுதியின் கீழ் வரும் இக்கிராம மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகின்றனர்

பாட்னா: கடுமையான குடி தண்ணீர் பஞ்சம் காரணமாக விலங்குகள் பருகும் நீரை குடிக்கும் அவல நிலைக்கு பிகார் மாநில கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள சன்வாடி கிராமம், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் எம்.பி.,-யான ஜெய் பிரகாஷ் நாராயன் யாதவின் மக்களவை தொகுதியின் கீழ் வரும் இக்கிராம மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகின்றனர்.

water crisis

பருகத் தகுந்த தண்ணீர் கிடைக்காமல், குடிநீர் பஞ்சத்தினால் அசுத்தமான குளம், குட்டைகளில் இருந்து எடுத்து வரப்படும் நீரை குடிக்கும் நிலைக்கு அந்த கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

water crisis

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஷீலா தேவி எனும் பெண் கூறும்போது, எங்களது கிராமத்துக்கு எந்த அரசு வசதியும் கிடைக்கவில்லை. அடிபம்ப் அல்லது ஒரு கிணறு கூட எங்களது கிராமத்தில் இல்லை. அசுத்தமான நீரை குடிப்பதால் மக்கள் நோய் வாய்ப்படுகிறார்கள் என்றார் வேதனையுடன்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க அரசியல்வாதிகள் இங்கு வருவர். அதன்பிறகு, அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற இங்கு எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். மனிதர்களும், விலங்குகளும் ஒரே நீரை தான் எங்களது கிராமத்தில் குடிக்கிறோம் என்கிறார் மற்றொரு கிராமவாசியான சர்ஜு புஜ்ஹார்.

இதையும் வாசிங்க

பாஜக-வில் இருந்து விலகிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!