கடும்பனியில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற 100 ராணுவ வீரர்கள்…மோடி வாழ்த்து: வைரல் வீடியோ!

 

கடும்பனியில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கி  சென்ற 100 ராணுவ வீரர்கள்…மோடி வாழ்த்து: வைரல் வீடியோ!

வசதி இல்லாததால் 100 ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து அந்த பெண்ணை தூக்கி சென்றனர். அப்போது அவர்களும் 30 பொதுமக்களும் உடன் சென்றனர்

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஷமிமா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  பனி சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால் 100 ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து அந்த பெண்ணை தூக்கி சென்றனர். அப்போது அவர்களும் 30 பொதுமக்களும் உடன் சென்றனர்.

ttn

 

நகருக்கு செல்ல சுமார் 4 மணிநேரம் ஆகும் நிலையில் நடந்தே சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  ஷமிமாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதையடுத்து அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலானது. 

இந்நிலையில்  கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்த  ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘நம் வீரர்கள் வீரத்திற்கும் தர்மத்திற்கும் பெயர் போனவர்கள். மனிதாபிமான குணம் மரியாதைக்குரியது. எந்த சூழலிலும் மக்களுக்கு உதவி தேவைப்படும் போது அதை செய்து முடிப்பவர்கள். பெருமையாக உள்ளது.  ஷமிமா மற்றும் அவரது குழந்தை ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்தித்துகொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.