கடுமையான நடவடிக்கை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்! – மோடி உருக்கம்

 

கடுமையான நடவடிக்கை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்! – மோடி உருக்கம்

ஊரடங்கு என்ற மிகக் கடுமையா நடவடிக்கை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்… மக்களின் உயிரைக் காக்க இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று மான்கிபாத் நிகழ்ச்சி மூலமாக பேசிய மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது, “உங்களின் வாழ்க்கையை குறிப்பாக ஏழைகளின் வாழ்வைப் பாதித்த மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால், இந்த நடவடிக்கை நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற அவசியம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற இதுபோன்ற ஒரு கடுமையான முடிவு அவசியம். இந்திய மக்களின் நலனைப் பாதுகாக்க இது மிக முக்கியமானதாக உள்ளது. 

யாருக்கும் வேண்டுமென்றே விதிமுறைகளை மீறுவதில் விருப்பமில்லை என்பது எனக்குப் புரிகிறது. அவர்களுக்காக நான் சொல்வது, நீங்கள் இந்த ஊரடங்கைப் பின்பற்றவில்லை என்றால், நாடு கொரோனா வைரஸ் என்ற மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்ளும். 

இந்த நேரத்தில் தங்கள் வீடுகள் அமர்ந்திருக்காமல் விட்டு வெளியேறி கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்துப் பல வீரர்கள் போராடி வருகிறார்கள். இவர்கள் நம்முடைய முன்வரிசை வீரர்கள். இப்படிப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.