கடுப்பேத்துறார் மை லார்ட்…”ரஜினி அரசியல் பிரவேசமும் அலப்பறைகளும்” : பிரஸ்மீட்டின் பரிதாபங்கள்!

 

கடுப்பேத்துறார் மை லார்ட்…”ரஜினி அரசியல் பிரவேசமும் அலப்பறைகளும்” :  பிரஸ்மீட்டின் பரிதாபங்கள்!

ரஜினி, மீண்டும் வழக்கம் போல் திரைப்படங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ற வார்த்தை வெகு  நீண்ட நாட்களாக நம் காதுகளில் வந்து பாய்ந்து கொண்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு 2021 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு  என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு ஆட்டம் காண வைத்த ரஜினி, மீண்டும் வழக்கம் போல் திரைப்படங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டாராக மாறினார். 

ttn

இதையடுத்து கடந்த மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி தான் களத்தில் இருப்பதை உறுதி செய்த அவர் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு என்று அறிவித்து ஒட்டுமொத்த மீடியாவையும் தன் பக்கம் திரும்பினார். 

ttn

பரபரப்பான காலையில் ரஜினியின் லீலா பேலஸ் விஜயத்துக்காக பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில் உள்ளே இவர்கள் தான் வரணும் இவங்க வரவக்கூடாது என்ற பாரபட்சம் வேறு. ஒருவழியாக அடித்து பிடித்து உள்ளே சென்ற பத்திரிகையாளர்கள், இன்றைய பிரேக்கிங் நியூஸில் நாமும் ஒரு பங்கு வைக்கிறோம் என்ற உற்சாகத்தில் காத்துக்கொண்டிருக்க, வழக்கம் போல் சிஸ்டம் சரியில்லை என்று பேச ஆரம்பித்த ரஜினி…என்னப்பா எல்லாம் இந்தப்பக்கம் என்று கேட்பது போல எந்த முக்கிய அறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

இந்த 20 நிமிடம் பேச்சுக்காக எத்தனை களேபரம், எத்தனை ஆர்ப்பாட்டம். எத்தனை கூத்து. இதெயெல்லாம் பார்க்கும் போது ச்ச ரஜினி செம்ம நடிகர்ப்பா என்றே சொல்ல தோன்றுகிறது. இனியாவது தமிழகத்தில் உள்ள செய்தியாளர்கள், தங்களது சுயமரியாதையை யோசித்து பார்ப்பது நல்லது. சார் சார் என்று கத்தும் போது, பத்திரிகையாளர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று தெரிந்தும் அங்கிருந்து செல்வது, அதுவும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் செல்வது எந்த மாதிரியான நாகரிகம் என்று தெரியவில்லை. 

 

உண்மையில் சொல்ல போனால் ஜனங்க வீட்ல இருந்து டிவியில பார்த்தாங்க. செய்தியாளர்கள் கிட்ட இருந்து பார்த்தார்கள் அவ்வளவு தான்.  இதற்காக பலரின் நேரமும் உழைப்பும் தான் வீணாகி போனது. 

கோடிகளில் பணம் பார்க்கும் ரஜினி வீட்டிலிருந்தே இந்த விஷயத்தை லைவ் செய்து இருக்கலாம்.அல்லது பிஆர்ஓ மூலம் வீடியோ வெளியிட்டு இருக்கலாம். அதை விடுத்து இப்படி ரசிகர்கள் , மீடியா கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு முறையும் புலி வருது கதையா வந்து விட்டு செல்வது…ஒரு நாள் புலியே உண்மையில் வந்தாலும் மக்கள் மத்தியில் பயத்தையோ, பீதியையோ கிளப்பாமல் உப்பு சப்பு இல்லாத நிலையாக ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பிக்காமலே  முடிந்துவிடுமோ  என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.