கடித்தது நாய் மட்டுமா..? தற்கொலைக்கு முயன்ற முகிலன்..!

 

கடித்தது நாய் மட்டுமா..? தற்கொலைக்கு முயன்ற முகிலன்..!

முகிலன் ஆந்திர வனப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பல நாட்கள் பட்டினியாக அலைந்துள்ளார் முகிலன்.

திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும்  முகிலன் காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. mukilan

நேற்று திருப்பதியில் கைது செய்யப்பட்டார் முகிலன். கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் காணமால் போனார்.  இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சரியாக 140 நாள் கழித்து திருப்பதியில் வைத்து நேற்று முகிலனை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவே தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட, முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ‌மனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.mugilan

இதனைத்தொடர்ந்து அதிகாலை 1.30-க்கு முகிலனை அழைத்துக்கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை புறப்பட்டனர். தற்போது எழும்பூரில் வைத்து முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்தபோது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒருவாரத்திற்கு முன் நாய் கடித்ததாக மருத்துவர்களிடம் முகிலன் கூறியதாகவும், சிபிசிஐடி விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும், சாப்பிடாததால் முகிலன் உடல் பலவீனமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 mugilan
முகிலன் ஆந்திர வனப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பல நாட்கள் பட்டினியாக அலைந்துள்ளார் முகிலன். போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டபோது அவர் தற்கொலைக்கு முன்றதாகவும் கூறப்படுகிறது.