கடவுள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் – சிறையில் இருந்தபடியே ப.சிதம்பரம் நக்கல்!

கடவுள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் – சிறையில் இருந்தபடியே ப.சிதம்பரம் நக்கல்!

நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே ஜி.டி.பி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று பேசியதை குறிப்பிட்டு இனி இந்திய பொருளாதாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் ட்விட் செய்யப்பட்டுள்ளது.

chidambarm

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே, “ஜி.டி.பி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எனவே, அதை ஒரு பைபிள், ராமாயணம் அல்லது மகாபாரதம் போல கருதத் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.
இது குறித்து ப.சிதம்பரம் கூறியதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜி.டி.பி எண்ணிக்கை என்பது எல்லாம் பொறுத்தமற்றதாகிவிட்டது, பர்சனல் டேக்ஸ் ரத்து செய்யப்படும், இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். இவை எல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் மறுமலர்ச்சி கொள்கைகள். கடவுள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

kanth

மத்திய அரசின் பொருளாதார, அரசியல் செயல்பாட்டை தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வந்த ப.சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். சிறைக்கு செல்லும்போதும் சரி, அவ்வப்போது வெளியே நீதிமன்றத்துக்கு வரும்போதும் சரி கிடைக்கும் கேப்பில் எல்லாம் மத்திய அரசை காலி செய்து வருகிறார் ப.சிதம்பரம். அந்த வகையில் பா.ஜ.க எம்.பி-யின் கருத்து பற்றி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது காங்கிரஸ் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.