கடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ!

 

கடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அன்று நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. 

மதுரை:  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அன்று நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. 

ஆம்புலன்ஸ்   வந்தால் உடனடியாக வழிவிட வேண்டும் என்றும் வருவது வெறும் வாகனம் அல்ல. ஒரு உயிரின் போராட்டம் என உணர்ந்து நாம் செயல்பட வேண்டுமென்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால் தான் எவ்வளவு நெருக்கடியில் சென்றாலும், சாலையில் ஆம்புலன்ஸ் வந்தால்  உடனே வழிவிடுவது வாகன ஓட்டிகளின் மனிதமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால்  சாமானிய மனிதன் என்ன? கடவுளே ஆனாலும் ஆம்புலன்ஸ்  வந்தால் வழிவிடுவார் என்பது இந்த செய்தியின் மூலம் தெரியவருகிறது. 

madurai

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்படி 10-ம் நாள் விழாவான கடந்த 17 ஆம் தேதி மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா ,   தேரோட்டம்  என விமர்சையாக திருவிழா நடைபெற்றது. 

kallazhagar

அதில் முக்கிய நிகழ்வான  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. பச்சைப்பட்டு உடுத்தித் தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 6 மணிக்கு  புறப்பட்ட கள்ளழகர்  ‘கோவிந்தா’ முழக்கத்துடன் வைகை ஆற்றில்  இறங்கினார். இந்த நிகழ்வில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கள்ளழகரைத் தரிசித்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் சித்திரை விழாவின் போது  எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரப்படுகிறது. அந்த வகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆம்புலன்ஸ் ஒன்று பின்னால்  வருகிறது. அப்போது மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் கள்ளழகர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு பின் அது சென்ற பிறகு செல்கிறார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

இதை வாசிக்க: பெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள்