கடவுளின் தேசத்தில் இரட்டை வீதி… தடையை உடைத்த பெரியார்..!

 

கடவுளின் தேசத்தில் இரட்டை வீதி… தடையை உடைத்த பெரியார்..!

இன்றைய தலைமுறை இதை நம்புவது கடினம்.150 வருடத்திற்கு முன்பு அதாவது 1865-ல் அன்றைய ஆங்கில அரசு ஒரு உத்தரவு போட்டது.நாட்டில் உள்ள எல்லாச் சாலைகளிலும் அனைத்துச் சாதியினரும் பயணிக்கலாம் என்று. ஆமாம், அப்படி ஒரு காலம் இருந்தது இந்தியாவில் குறிப்பாக கேரளாவில்.

இன்றைய தலைமுறை இதை நம்புவது கடினம். 150 வருடத்திற்கு முன்பு அதாவது 1865-ல் அன்றைய ஆங்கில அரசு ஒரு உத்தரவு போட்டது. நாட்டில் உள்ள எல்லாச் சாலைகளிலும் அனைத்துச் சாதியினரும் பயணிக்கலாம் என்று. ஆமாம், அப்படி ஒரு காலம் இருந்தது இந்தியாவில் குறிப்பாக கேரளாவில்.

இந்த சட்டம் வந்தபோது, அன்றைய திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் திடுக்கிட்டன. கேரள இந்துக்கோவில் நிர்வாகிகள் கோர்டுக்குப் போனார்கள். முக்கியமாக வைக்கம் மகாதேவர் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வினோதமான தீர்ப்பை வழங்கினார். அதன்படி சாலைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டன. ஊர்களை இணைக்கும் சாலைகள் மட்டுமே ராஜ விதிகள், அவைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். ஊருக்குள் போகும், குறிப்பாக கோவிலை சுற்றிச் செல்லும் சாலைகள் கிராமச்சாலைகள், அவற்றுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றது அந்தத் தீர்ப்பு. 

வைக்கம்

அப்போதே வைக்கம் மகாதேவர் கோவில் மாடவீதிகளில் ‘ இந்தத் தெருக்களில், ஈழவர்,மற்றுமுள்ள கீழ் சாதியினர் நடக்கக் கூடாது ‘ என்றவாசகத்துடன் பலகைகள் வைக்கப்பட்டன. அந்த பலகைகளை பிடுங்கி எறிய ஒரு நூற்றாண்டு காலமாம் ஆனது.டி.கே மாதவனும்,ஈ.வே ராமசாமியும் வரும் வரை அது பல உயிர்களை பலிகொண்டபடி, சனாதனத்தின் சின்னமாக அங்கேயேதான் நின்றிருந்தது. இடையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை. 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அவிட்டம் திருநாள் பாலராமவர்மா ஆண்ட காலத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோட்டயம், திருவல்லிக்குன்னு சாலையில் இருந்து மகாதேவர் கோவிலின் கிழக்கு வாசல் வழியே நுழையும் முடிவுடன் ஊர்வலமாக வந்த 200 ஈழவ இளைஞர்களை கோயாக்குட்டி என்கி திருவாங்கூரிலிருந்து அனுப்பட்ட அதிகாரி தலைமையில் உள்ளூர் நாயர்கள் வாட்களுடன் வந்து வெட்டி விரட்டி அடித்தனர். அந்த போராட்டத்தில் கத்திக்குப் பயந்து அங்கே இருந்த தளவாய் குளத்தில் குதித்து செத்தவர்களும் உண்டு. அந்தக்குளம் இப்போது தூர்க்கப்பட்டு பேருந்து நிலையம் ஆகிவிட்டது.

இதற்கு 120 வருடம் கழிந்தும்  ஸ்ரீ நாராயண குரு என்கிற ஈழவர்களின் ஆன்மீக குரு, மகாகவி குமாரன் ஆசான் ஆகியோர் அந்தச் சாலையில் நுழைய முற்பட்டபோதும் அவர்களின் சாதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது ஸ்ரீநாராயணகுரு சமிதி நிர்வாகியாக இருந்த டி.கே ராமச்சந்திரன் வைக்கம் கோவிலுக்குள் நுழைந்தே தீர்வது என்ற உறுதி எடுத்தார். முதற்கட்டமாக, தேர்தலில் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டசபைக்குள் நுழைந்தார். அவர் கொண்டுவந்த முதல் தீர்மானமே வைக்கம் ஆலயப் பிரவேசமே. ஆனால் அந்தத் தீர்மானம் சபைமுன் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்துதான் காங்கிரஸ் கட்சியின் உதவி நாடப்பட்டது.

காக்கி நாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தின் பொறுப்பு கேரள மாகான காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொள்ள அப்போது காங்கிரசில் இருந்த பெரியாரை அழைக்கிறார்கள். நெல்லையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்த பெரியார் தன் மனைவி நாகம்மையுடன் வைக்கம் வந்தார். அங்கே வந்த அன்றே தடையை மீறி கூட்டத்தில் பேசி ஒரு மாத சிறைத் தண்டனை பெற்றார் பெரியார்.

T.K-samy-and-Periyar

அவர் சிறையில் இருந்த நேரத்தில் நாகம்மையார் திருமதி ஜோசப், திருமதி டி.கே மாதவன் ஆகியோருடன் வைக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறார். ஒருமாதம் கழித்து வெளியே வந்த பெரியாரை எப்படியாவது திருப்பி அனுப்ப பல்வேறு முயற்சிகள் செய்திருக்கிறது அன்றைய திருவாங்கூர் அரசு. அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. காந்தியிடமும் பேசி இருக்கிறார்கள். காந்தியோ,வைக்கம் சத்யாகிரஹ வீரர்களுக்கு உணவு தயாரித்து அளிக்க பஞ்சாபில் இருந்து வந்த அகாலிகள், திரு ஜோசப்,வழகறிஞர் ரஹ்மான் போன்றோரை மட்டும் போராட்டத்தில் இருந்த விலக்கி வைத்து இது இந்துக்களின் போராட்டம் அவர்களே போராடட்டும் என்று சொல்லிவிட போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. 

இந்த முறை பெரியாருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை கிடைக்கிறது. பெரியார் சிறைத்தண்டனை பெற்ற சில நாட்களில் ‘மூலம் திருநாள் மகாராஜா’ இறந்து போனார். இந்த சாவுக்கு காரணம் என்று அரச குடும்பத்தில் ஒரு பீதி கிளம்பியதாம். அரசருக்குப் பிறகு பதவிக்கு வந்த ராணி சேதுபாய் லட்சுமியுடன் காந்தி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து 1925ம் வருட இறுதியில் வைக்கம் ஆலயத்திற்குள் எல்லோரும் நுழைய திருசாங்கூர் சமஸ்தானம் அனுமதி அளித்தது.

A-memorial-statue-commemorating-the-Vaikom-Satyagraha-at-Vaikom