கடற்கரையில் ஹாயாக போஸ் கொடுத்த திரிஷா! வைரல் போட்டோ! 

 

கடற்கரையில் ஹாயாக போஸ் கொடுத்த திரிஷா! வைரல் போட்டோ! 

நடிகை திரிஷா மாலத்தீவில் கடற்கரையோரம் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை திரிஷா மாலத்தீவில் கடற்கரையோரம் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

90’ஸ் கிட்ஸ்கிற்கு மிகவும் பிடித்தமான நடிகை என்றால் அது திரிஷா தான். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 10 வருடத்திற்கு மேல் டாப் நாயகியாக வலம் வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த இவருக்கு  96 திரைப்படம் அவரது சினிமா கெரியரில் புதிய திருப்புமுனையைத் தந்துள்ளது.

தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள திரிஷா, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் ‘ராங்கி’ படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபத விளையாட்டு’ படத்தின் டீசர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், அதிகம் ஊர் சுற்றி பாக்கும் பழக்கம் கொண்ட திரிஷா தற்போது மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு  தனியாக கடற்கரையில் குளித்து விட்டு ஹாயாக அமர்ந்திருக்கும் படி புகைப்படம் ஒன்றை எடுத்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நான் கவனிக்க தயாராக இருக்கும்போது என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் வழக்கம் போல்  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.