கடற்கரையில் அத்துமீறும் காதல் ஜோடிகளிடம் பணப் பறித்த ’போலி’ஸ்!

 

கடற்கரையில் அத்துமீறும் காதல் ஜோடிகளிடம் பணப் பறித்த ’போலி’ஸ்!

காவல்துறை அதிகாரி எனக்கூறி மிரட்டி சென்னையில் காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடற்கரையில் அத்துமீறும் காதல் ஜோடிகளிடம் பணப் பறித்த ’போலி’ஸ்!

பெருங்குடியைச் சேர்ந்த யுவராஜ், பென்சட்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கசங்கிய சட்டையும், அலங்கோலமாக தோற்றம் கொண்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரி எனக்கூறி யுவராஜைத் தடுத்துள்ளார். இங்கு ஏன் வந்தாய் என கேட்டு மிரட்டிய அவர், விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளார்.

காவல்துறை அதிகாரி எனக்கூறி மிரட்டி சென்னையில் காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெருங்குடியைச் சேர்ந்த யுவராஜ், பென்சட்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கசங்கிய சட்டையும், அலங்கோலமாக தோற்றம் கொண்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரி எனக்கூறி யுவராஜைத் தடுத்துள்ளார். இங்கு ஏன் வந்தாய் என கேட்டு மிரட்டிய அவர், விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளார். காவல்நிலையம் வர யுவராஜ் மறுத்ததால், அவரிடமிருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். காவல்துறை அதிகாரிக்கான தோற்றம் இல்லாததும், மோசமான அணுகுமுறையும் சந்தேகத்தை ஏற்படுத்த, உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார் யுவராஜ். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தப்பியோட முயன்ற அந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதன்பின் நடைபெற்ற விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜமால் என்பதும், கடற்கரைக்கு வருபவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இரவு நேரத்தில் கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை குறிவைத்தும்,   தனிமையில் உள்ள காதலர்களை பின் தொடர்ந்தும் காவலர் எனக்கூறி அவர்களிடம் பணம் பறித்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.

காதல் ஜோடிகளிடம் தான் காவல்துறை அதிகாரி என்றும், பணம் தரவில்லை என்றால் வழக்கு போட்டுவிடுவதாக கூறி மிரட்டி ஏமாறுபவர்களிடம் பணம் பறிப்பதே ஜமாலின் குல தொழில். வீட்டை விட்டு வெளியே சுற்றும் காதலர்களின், விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால், கேட்கும் பணத்தை காதல் ஜோடிகள் கொடுத்துவிடுவார்கள். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜமால், வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஜமாலை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.