கடன் வாங்க வங்கிக்கு சென்றவர் கோடீஸ்வரரான விநோதம்!  

கடன் வாங்க வங்கிக்கு சென்றவர் கோடீஸ்வரரான விநோதம்!  

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பொருனன் ராஜன், லாட்டரி சீட்டுக்கு அடிமையானவர். பலமுறை லாட்டரி சீட்டுக்கு வாங்கியும் ராஜனுக்கு ஒருமுறை கூட ஜாக்பாட் அடிக்கவில்லை. ஆனாலும் லாட்டரி மோகம் அவரை விட்டபாடில்லை. தான் வாங்கும் கூலி அனைத்தையும், லாட்டரிக்காகவே செலவு செய்துவந்தார். இதனால் ராஜனுக்கும் அவரது மனைவி ரஜினிக்கு அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாக இருந்துவந்தது. 

இதனால் லாட்டரி பழக்கத்தை தலை முழுகிவிட்டு கடன் வாங்கி தொழில் செய்யலாம் என கூத்தப்பரம்பாவில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார் ராஜன். வழியிலேயே ராஜனுக்கு லாட்டரி மோகம் தொற்றிக்கொண்டது. இதனால் வங்கிக்கு செல்லும் வழியில் இருக்கும் கடையொன்றில் ரூ.300-க்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அதுமட்டுமின்று வங்கிக்கு சென்று 7 லட்சம் ரூபாய் கடனும் பெற்றுள்ளார். அந்த லாட்டரி கடந்த திங்கட்கிழமை ராஜனுக்கு விழுந்தது. அதில் ராஜனுக்கு ரூ. 12 கோடி பரிசாக விழுந்ததாக செய்தி வந்தது. இதைப்பார்த்த ராஜனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. 

ராஜன் குடும்பத்தினர்

அந்த சந்தோஷத்துடன் அம்மாநில ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராஜன், “ லாட்டரி விழுந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பரிசு மூலம் நான் வங்கியில் வாங்கிய கடனான ரூ. 7 லட்சத்தை அடைத்து விடுவேன். மேலும் இந்தத் தொகையின் மூலம் எனது இளைய மகள் அதிராவின் கல்வியை எந்த தடையுமின்றி தொடர முடியும், மேலும் என்னைப் போல் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவேன். பாதியில் படிப்பை நிறுத்திய எனது மகன் ரிஜிலினை மேற்படிப்பும் படிக்க வைப்பேன்” எனக்கூறினார்.