கடன் வட்டி விகிதத்தைக் குறைத்த எஸ்.பி.ஐ! நாளை முதல் அமல்

 

கடன் வட்டி விகிதத்தைக் குறைத்த எஸ்.பி.ஐ! நாளை முதல் அமல்

கடன் வட்டி விகிதத்தைக் கால் சதவிகிதம் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

கடன் வட்டி விகிதத்தைக் கால் சதவிகிதம் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எஸ்.பி.ஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு நாளை (1-1-2020) முதல் அமலுக்கு வருகிறது. இதனால், புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 8.15ல் இருந்து 7.90 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.

TTN

இதேபோல், ஏற்கனவே வாங்கியுள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வட்டியிலும் கால் சதவிகிதம் குறைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 1.35 சதவிகிதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப் பிறகு இதை வங்கிகள் அமல்படுத்த நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. இந்த கால இடைவெளியைக் குறைக்க அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டி விகிதத்தை உடனடியாக பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.