கடன் பெற்றவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பணத்தை திரும்ப பெறக்கூடாது! வங்கிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

கடன் பெற்றவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பணத்தை திரும்ப பெறக்கூடாது! வங்கிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

பைனான்ஸ் வாங்கிய வண்டியை, தவணை பணம் கட்டவில்லை என்று, வங்கி நிர்வாகம், கடன் பெற்றவரிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுக்க கூடாது என்று டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.

பைனான்ஸ் வாங்கிய வண்டியை, தவணை பணம் கட்டவில்லை என்று, வங்கி நிர்வாகம், கடன் பெற்றவரிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுக்க கூடாது என்று டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.

தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், கடன் பெற்றவர், கடனை சரியாக கட்டவில்லை என்று, வங்கி, வலுக்கட்டாயமாக வண்டியை தூக்க கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது .கடன் ஒப்பந்தம் சிவில் காண்ட்ராக்ட் ஆகும். அதனால், சிவில் ரெமெடி மூலமே, அதாவது, நீதிமன்றம் மூலமே, வண்டி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஐசிஐசிஐ வங்கி எதிர் பிரகாஷ் கௌர் என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கி, கடன் வாங்கியவர் வீட்டுக்கு சென்று, வலுக்கட்டாயமாக வண்டியை பறிமுதல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. 

வங்கிகளின் பறிமுதல்

நீதிமன்ற நடவடிக்கை மெதுவாக இருக்கலாம் ஆனால், அதற்காக பைனான்சியர் அடியாட்களை வைத்து, கடன் கொடுத்ததற்காக, வண்டியை பறிமுதல் செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. வலுவான சட்டம் இருக்கும் ஒரு நாகரீகமுள்ள சமூகத்தில், இப்படிப்பட்ட நீதியை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது