கடன் தள்ளுபடியா, நிறுத்தமா என்று விவாதிப்பதை விடுத்து வசூலிக்க நடவடிக்கை எடுங்கள்! – ப.சிதம்பரம்

கடன் தள்ளுபடியா, நிறுத்தமா என்று விவாதிப்பதை விடுத்து வசூலிக்க நடவடிக்கை எடுங்கள்! – ப.சிதம்பரம்

ரூ.68 ஆயிரம் கொடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்ததா, நிறுத்தி வைத்ததா என்று வெற்று விவாதத்தை நிறுத்திவிட்டு அதை வசூலிப்பதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

reserve-bank-of-india

வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிய பெரும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது தள்ளுபடி இல்லை, நிறுத்திவைப்பு மட்டுமே என்று பா.ஜ.க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்தியில் இருந்து கிராமம் வரை உள்ள பா.ஜ.க தலைவர்கள் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கின்றனர். ஏன் இப்படி நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் இல்லை.

இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், “ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!

இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.

மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.