கடன்காரர்களுக்குப் பயந்து பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த இயக்குநர் சேரன்…

 

கடன்காரர்களுக்குப் பயந்து பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த இயக்குநர் சேரன்…

பிக் பாஸ் டீம் அமீரின் பேச்சு எப்போதுமே பயங்கர போரடிக்கிறது. அதுவும்போக அவர் நேரடியாக கமலை ஆதரிப்பவர் என்பதால் சற்று தயங்கி சேரன் பெயரை முன்மொழிந்திருக்கிறார்கள்.

மற்ற போட்டியாளர்களெல்லாம் எதிர்பார்ப்புக்கும் கீழே அமைந்துவிட்ட நிலையில்,‘பிக் பாஸ் சீஸன் 3’ வீட்டிற்கு இயக்குநர் சேரன் எண்ட்ரியாக ஓ.கே.சொன்னது கமல் பாஸே எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் என்கிறது விஜய் டி.வி. வட்டாரம். 

kamal

சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு வரை தயாரான பட்டியலில் சேரன் பெயர் இருக்கவில்லை. இம்முறை தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கொஞ்சம் காரசாரமாகப் பேசக்கூடிய ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி கமல் சஜஸ்ட் செய்த பெயர் இயக்குநர் அமீர். ஆனால் பிக் பாஸ் டீம் அமீரின் பேச்சு எப்போதுமே பயங்கர போரடிக்கிறது. அதுவும்போக அவர் நேரடியாக கமலை ஆதரிப்பவர் என்பதால் சற்று தயங்கி சேரன் பெயரை முன்மொழிந்திருக்கிறார்கள்.

cheran

‘சேரன்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வர்ற அளவுக்கு, அதுவும் 100 நாள் கலந்துக்குற அளவுக்கு வெட்டியாவா இருப்பார்? அப்படி அவர் வந்தா கூப்பிடுங்க’ என்று கமல் சொல்லவே தயங்கித் தயங்கி விஜய் டிவ். சேரனை அணுகியிருக்கிறது. அவரது கடைசி ரிலீஸான ‘திருமணம்’…சில திருத்தங்களுடன்…படமும் அழுத்தம் திருத்தமாக சேரனை மேலும் கடனாளியாக்கியிருந்த நிலையில்’எத்தனை நாள் தாக்குப்பிடிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும். மத்தவங்களை விட எனக்குக் கொஞ்சம் மீட்டருக்கு மேல அதிகமா போட்டுக்கொடுக்க வாய்ப்பிருக்கா? என்ற இரண்டே கேள்விகளோடு ஓ.கே.சொன்னாராம் சேரன்.

முதல் நாளே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்…இந்த முறை டைட்டில் வின்னர் சேரன்தான்…