கடனை திருப்பி கேட்டால் கையை விரிக்கும் அனில் அம்பானி ! கலக்கத்தில் சீன கடன்தாரர்கள்!

 

கடனை திருப்பி கேட்டால் கையை விரிக்கும் அனில் அம்பானி ! கலக்கத்தில் சீன கடன்தாரர்கள்!

கடன் கொடுத்த சீன கடன்தாரா்களுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி திருப்பி கொடுக்க வேண்டும் என அனில் அம்பானியின் நிறுவனம் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடன் கொடுத்த சீன கடன்தாரா்களுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி திருப்பி கொடுக்க வேண்டும் என அனில் அம்பானியின் நிறுவனம் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

anil ambani

ஒரு பதினொரு வருஷத்துக்கு முன்னால உலகின் 6வது பெரிய பணக்காரர் யார்ன்னா பார்த்தா அது நம்ம அனில் அம்பானிதான். ஆனா இப்பம் அவரு நிலைமை எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரேன்னு மாதிரி ஆயிட்டு. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர் நிதி நெருக்கடியில் சிக்க தவிக்க, அதனை சமாளிக்க பல நிறுவனங்களிடம் அவர் கடனாக வாங்கி குவித்தார்.

உள்நாட்டு வங்கிகள் மற்றும் வெளிநாட்டு கடன் நிறுவனங்கள் என்று யார் கடன் கொடுக்க தயாராக இருந்தாலும் அவர்களிடம் கடனை வாங்கினார் அனில் அம்பானி. ஒரு கட்டத்தில் அனில் அம்பானியால் கடனை திருப்பி செலுத்த முடியாது என்று நினைத்த கடன் நிறுவனங்கள் அவருக்கு நெருக்கடிக்கு கொடுக்க ஆரம்பித்தன.

anil ambani

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய அனில் அம்பானி  முயற்சி செய்தார். ஆனால் அது பல்வேறு காரணங்களால் முடியவில்லை. நிலைமை முடிந்த அளவுக்கு சமாளித்து பார்த்த அனில் அம்பானி, நிலைமை கை மீறி போகுவதை உணர்ந்த அவர் நிறுவனங்களை திவால்  நடவடிக்கைக்கு உட்படுத்தினார். தற்போது திவால் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனக்கு கடன் கொடுத்த ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் சீனா டெவல்ப்மெண்ட் பேங்க் உள்ளிட்ட சீன கடன் நிறுவனங்கள் குறித்த விவரங்களை பங்குச் சந்தைகளிடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.57 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிறுவனம் கடனை திருப்பி கொடுக்க வேண்டியது. சீன நிறுவனங்களுக்கு மட்டும் மொத்த கடனில் நான்கில் ஒரு பகுதியை அனில் அம்பானி கொடுக்க வேண்டியது உள்ளது.

anil ambani

சீன கடன்தாரர்களில் அதிகபட்சமாக சீனா டெவல்ப்மெண்ட் பேங்க்கு மட்டும் அனில் அம்பானி ரூ.9,860 கோடி திருப்பி கொடுக்க வேண்டும். எக்சிம் பேங்க் ஆப் சீனாவுக்கு சுமார் ரூ.3,360 கோடியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த பட்டியலில் மேலும் பல சீன கடன் நிறுவனங்கள் உள்ளன. இந்த கடனையை எல்லாம் அம்பானி எப்படி அடைக்க போறார்ன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.