கடனை திருப்பிக் கேட்டவர் கொலை; சம்பவத்தை மறைக்க நாடகமாடியது அம்பலம்!

 

கடனை திருப்பிக் கேட்டவர் கொலை; சம்பவத்தை மறைக்க நாடகமாடியது அம்பலம்!

கடனை திருப்பிக் கேட்டவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த இளைஞரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்

புதுதில்லி: கடனை திருப்பிக் கேட்டவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த இளைஞரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு தில்லியை சேர்ந்தவர் போஜ் நாராயணன். இவர் நிதின் யாதவ் (24) என்ற இளைஞருக்கு ரூ.30,000 கடனாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தான் கொடுத்த கடனை போஜ் நாராயணன் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால், அவரை கொலை செய்த திட்டம் தீட்டிய நிதின் யாதவ் சிறுவன் ஒருவனது உதவுயுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

murder

இந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய நிதின், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சாலையில் ஒருவர் படுகாயங்களுடன் கிடக்கிறார். அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையை மீண்டும் தொடர்பு கொண்ட நிதின், படுகாயங்களுடன் கிடந்தவரை எனக்கு தெரியும். நான் அவரை துவாரகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

police

அவரது தகவல் முன்னுக்கு பின் முரணாக இருக்கவே அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட போது, தான் போஜ் நாராயணனிடம் ரூ.30,000 கடனாக பெற்றதாகவும், அதனை திருப்பி கேட்டபோது சிறுவன் ஒருவனது உதவியுடன் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!