கடனை குறைக்க கோகோ கோலா நிறுவனத்துடன் பேசும் காபி டே குழுமம்….

 

கடனை குறைக்க கோகோ கோலா நிறுவனத்துடன் பேசும் காபி டே குழுமம்….

காபி டே குழுமம் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், கபே காபி டே நிறுவனத்தின் கணிசமான பங்குகளை கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

காபி டே குழுமம் தனது நிறுவனர் வி.பி. சித்தார்த்தா கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதால் சற்று தடுமாற்றம் கண்டது. இருப்பினும், தற்போது அதிலிருந்து மீண்டு வர தொடங்கி விட்டது. அண்மையில், காபி டே குழுமத்தின் மொத்த கடன் விவரங்களை காபி டே என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்டது. 

காபி டே

காபி டே குழுமத்துக்கு மொத்தம் ரூ.4,970 கோடி கடன் இருப்பதாகவும், அனைத்து கடனும் திருப்பி அடைக்கப்படும் என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்தது. மேலும், காபி டே குழுமத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தை விற்பனை வாயிலாக கிடைக்கும் பணத்தை கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படும் என கூறியது. இதன் மூலம் கடன் சுமை வெகுவாக குறையும்.

சிகால்

இந்நிலையில், கடன் சுமையை மேலும் குறைக்க, கபே காபி டே உள்ள தங்களது பங்குகளில் கணிசமான பகுதியை கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த காபி டே குழுமத்தின் புரோமோட்டர்ஸ் திட்டமிட்டுள்ளனர். மேலும் அந்த குழுமத்தின் சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக யோசனை செய்து வருவதாகவும் தகவல்.