கடனுக்கான வட்டி மேலும் குறைய வாய்ப்பு!

 

கடனுக்கான வட்டி  மேலும் குறைய வாய்ப்பு!

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.15 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கை கூட்டத்தின் போது முக்கிய கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதம் குறித்து ஆய்வு செய்து நிர்ணயம் செய்யும். கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது சில்லரை பணவீக்கத்தை கருத்தில் கொண்டே முடிவு செய்யும். இதனால் சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் மாதந்தோறும் வெளியாகும். 

காய்கறி சந்தை

கடந்த ஜனவரி முதல் சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஜனவரியில் சில்லைரை விலை பணவீக்கம் 1.97 சதவீதமாக இருந்தது. சென்ற ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.05 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி

சில்லரை விலை பணவீக்கம் கடந்த மாதத்தில் உயர்ந்துள்ள போதிலும், அது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள இலக்கை காட்டிலும் குறைவாகவே உள்ளது. அதனால் ரிசா்வ் வங்கி வரும் நிதிக்கொள்கை கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த நிதிக்கொள்கை கூட்டத்தின் போது முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது குறிப்பிடத்தக்கது.