கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி….

 

கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி….

ஸ்டேட் வங்கி கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் இதுவரை 4 முறை கடனுக்கான வட்டியை குறைத்து இருந்தது. இந்நிலையில் பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில் கடனுக்கான அடிப்படை வட்டியை ஜந்தாவது முறையாக தற்போது குறைத்துள்ளது.

ஸ்டேட் வங்கி கிளை

ஸ்டேட் வங்கி  அனைத்து கடன்களுக்கான அடிப்படை எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்து 8.25 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி செலவினம் குறையும். மேலும் புதிதாக லோன் வாங்குபவர்களுக்கு முன்பே காட்டிலும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி குறைப்பு

கடனுக்கான வட்டியை குறைத்தது போல் டெபாசிட்டுகளுக்கான வட்டியையும் ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. பல்வேறு விதமான டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.10 முதல் 0.25 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 10 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.