கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி! குஷியில் வாடிக்கையாளர்கள்…

 

கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி! குஷியில் வாடிக்கையாளர்கள்…

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான மாதந்திர வட்டி செலவினம் குறையும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை 0.35 சதவீதம் குறைத்தது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஸ்டேட் வங்கி

இந்நிலையில் பொதுத்துறையை சேர்ந்த ஸ்டேட் வங்கி முதலாவதாக கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் ஸ்டேட் வங்கி குறைத்தது.மேலும் இந்த வட்டி குறைப்பு வரும் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான மாதந்திர வட்டி செலவினம் குறையும்

ஸ்டேட் வங்கி கிளை

ஸ்டேட் வங்கியை பின்பற்றி மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.