கடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு……

 

கடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு……

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவில், தனக்கு ரூ.3.4 கோடி மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆக, கடந்த 5 வருஷத்துல் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் உயர்ந்திருக்கு.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த செவ்வாய்கிழமையன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில், தற்போது (2020 நிலவரப்படி) தனக்கு ரூ.3.4 கோடி மதிப்பு சொத்துக்கள் இருப்பதாகவும், ரொக்கம் மற்றும் நிரந்தர வைப்புதொகையாக மொத்தம் ரூ.9.65 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவி சுனிதாவிடம் ரொக்கம் மற்றும் நிரந்தர டெபாசிட்டாக மொத்தம் ரூ.57 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரொக்கம்

2015 டெல்லி சட்டப்பேரவை தேர்தலின்போது அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவில், தனக்கு ரூ.2.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், ரொக்கம் மற்றும் நிரந்தர டெபாசிட் வகையில் மொத்தம் ரூ.2.26 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், தனது மனைவியிடம் ரொக்கம் மற்றும் நிரந்தர டெபாசிட்டாக மொத்தம் ரூ.15 லட்சம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். தனது மனைவி சுனிதாவுக்கு விருப்பு ஓய்வின் பலனாக ரூ.32 லட்சம் கிடைத்ததால் தற்போது அவரது டெபாசிட் தொகை அதிகரித்துள்ளதாக கெஜ்ரிவால் காரணம் தெரிவித்துள்ளார்.

சுனிதா
 
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். சக்தே இந்தியா சினிமா நட்சத்திரம், டாக்சி டிரைவர் என மொத்தம் 93 பேர் அந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். இருப்பினும் நாளை மாலைக்கு பிறகே புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து எத்தனை பேர் போட்டியிட போகிறார்கள் என்ற உண்மையான நிலவரம் தெரியும். ஏனென்றால் நாளை வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.