கடந்த 11 வருஷத்துல வங்கிகளில் ரூ.2.05 லட்சம் கோடி சீட்டிங் செய்த பலே கில்லாடிகள்

கடந்த 11 வருஷத்துல வங்கிகளில் ரூ.2.05 லட்சம் கோடி சீட்டிங் செய்த பலே கில்லாடிகள்

ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற சில மோசடி மன்னர்களைதான் நமக்கு இதுவரை தெரியும். ஆனால் அவர்களை போன்ற பல ஆயிரம் மோசடி மன்னர்கள் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்தள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) வெளியிட்ட புள்ளிவிவரத்தில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

nirav modi and vijayamallaya

ஆர்.பி.ஐ. தகவலின்படி, 2008-09 முதல் 2018-19ம் நிதியாண்டு வரையிலான கடந்த 11 வருஷத்துல நம் நாட்டுல செயல்படும் ஸ்டேட் வங்கி போன்ற உள்நாட்டு வங்கிகளிலும், எச்.எஸ்.பி.சி. போன்ற வெளிநாட்டு வங்கிகளிலும் மொத்தம் ரூ.2.05 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சுமார் 54 ஆயிரம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.

loan

இந்த மோசடியில உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா? அரசு வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிளில்தான் அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் மோசடி தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக 6,811 வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் ரூ.5,033 கோடிக்கு அந்த வங்கியில் மோசடி நடைபெற்றுள்ளது. 

money

அடுத்தததாக ஸ்டேட் வங்கியில் ரூ.23,734  கோடிக்கு மோசடி நடந்ததாக 6,793 புகார்கள் பதிவாகி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.1,200 கோடிக்கு மோசடி நடைபெற்றதாக 2,497 வழக்குகள் உள்ளன. அடுத்து பேங்க் ஆப் பரோடா (2,160 புகார்கள்), பஞ்சாப் நேஷனல் பேங்க் (2,047 வழக்குகள்), ஆக்சிஸ் பேங்க், சிண்டிகேட் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல உள்நாட்டு வங்கிகளில் மோசடி நடந்ததாக பல ஆயிரம் புகார்கள் பதிவானது.
இதுதவிர, இந்தியாவில் செயல்படும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், சிட்டி பேங்க், எச்.எஸ்.பி.சி. மற்றும் தி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து போன்ற வெளிநாட்டு வங்கிகளிலும் பல ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் பதிவாகி உள்ளது. ஆனால் உள்நாட்டு வங்கிளுடன் ஒப்பிடும்போது இவற்றில் மோசடி மதிப்பு மிகவும் குறைவு. உதாரணமாக, கடந்த 11 ஆண்டு காலத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன்  வங்கியில் மோசடி  நடந்ததாக 1,862 புகார்கள் பதிவாகியுள்ளது. அதாவது 11 வருஷத்துல அந்த வங்கியில் வெறும் ரூ.86 கோடிக்குதான் மோசடி நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.