கடந்த 100 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூன் மாதம்!

 

கடந்த 100 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூன் மாதம்!

கடந்த 2009ஆம் ஆண்டு பெய்த 85.7 மி.மீ. மழைதான் கடந்த 100 ஆண்டுகளில் ஜூன் மாதம் கண்ட மிகக்குறைந்த அளவு. இந்தியா முழுமைக்கும் கணக்கில் கொண்டால், வழக்கத்தைவிட 35% குறைவான மழையே பெய்திருக்கிறது. இன்னைக்கி சென்னை, நாளைக்கி இந்தியா முழுக்க! எனவே, தண்ணீர் சிக்கனத்தில் கவனம்.

1920ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான 100 ஆண்டுகளில், மிக வறட்சியான ஐந்து ஜூன் மாதங்களில் இந்த மாதமும் ஒன்றாக பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் ஆரவாரத்துடன் கேரளாவில் துவங்குவது வழக்கம். இதோ, ஜுன் மாதமே முடியப்போகிறது. ஆனாலும், தென்மேற்கு பருவம் இன்னும் தன் முழு ஆற்றலை காட்டவில்லை. இதற்கு முன்பாக, 1923, 1926, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதம் வழக்கத்தைவிட குறைவான மழையளவை பெற்றிருந்தது. இந்த மோசமான பட்டியலில் 2019 ஜூன் மாதமும் இணைந்திருக்கிறது.

Driest June

ஒவ்வொரு ஜூனிலும் இந்தியாவில் சராசரி மழையளவு 151 மில்லிமீட்டர்கள். ஆனால், மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதுநாள்வரை 2019 ஜூன் கண்ட மழையளவு 97.9 மில்லிமீட்டர்கள் மட்டுமே. கடைசி இரண்டு நாட்களில் பெய்யக்கூடிய உத்தேச மழையளவை கணக்கில்கொண்டாலும்கூட 112மி.மீட்டரைத் தாண்டாது. கடந்த 2009ஆம் ஆண்டு பெய்த 85.7 மி.மீ. மழைதான் கடந்த 100 ஆண்டுகளில் ஜூன் மாதம் கண்ட மிகக்குறைந்த அளவு. இந்தியா முழுமைக்கும் கணக்கில் கொண்டால், வழக்கத்தைவிட 35% குறைவான மழையே பெய்திருக்கிறது.  இன்னைக்கி சென்னை, நாளைக்கி இந்தியா முழுக்க! எனவே, தண்ணீர் சிக்கனத்தில் கவனம்.