கடந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

 

கடந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….

கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்தனர். அதேவேளையில் சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது

பல முன்னணி நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. சென்ற வார தொடக்கத்தில் சீனாவில் கொரோனாவைரஸ் தாக்கம் குறைந்ததாக செய்தி வெளியானது. இது போன்ற காரணங்களால் சென்ற வார தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும், கடந்த ஜனவரி சில்லரை மற்றும் பணவீக்கம் உயர்ந்தது, சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து போன்ற காரணங்களால் அதற்கடுத்த நாட்களில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

கொரோனாவைரஸ் தாக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்.

பங்கு வர்த்தகம்

கடந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில்  மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.89 புள்ளிகள் உயர்ந்து 41,257.74 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,113.45 புள்ளிகளில் முடிவுற்றது