கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதம் வீழ்ச்சி…. கவலையில் மத்திய அரசு…

 

கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதம் வீழ்ச்சி…. கவலையில் மத்திய அரசு…

கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதம் குறைந்துள்ளது. 2019 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். சென்ற நிதியாண்டின் கடைசி மாதமான கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதம் குறைந்துள்ளது. 2019 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. கொரோனா வைரஸ் லாக்டவுனால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி கிடக்கும் இந்த வேளையில், முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்து இருப்பது மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரி

கடந்த மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 7 துறைகளின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். சென்ற நிதியாண்டில் ( 2019 ஏப்ரல்-2020 மார்ச்) முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் (2018 ஏப்ரல்-2019 மார்ச்) முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 4.4 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

கட்டுமான பணி

கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின உற்பத்தி குறைந்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் பின்னடைவை சந்தித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.