கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

 

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலிய பொருட்கள், தோல் பொருட்கள், ஆயுத்த ஆடைகள், ரசாயனங்கள், கடல் உணவு பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேசமயம் தங்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய், பாமாயில் போன்ற பல பொருட்களை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

ஏற்றுமதி, இறக்குமதி

இந்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்தின் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஏற்றுமதி, இறக்குமதி

8 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 9.71 சதவீதம்  சரிவடைந்தது. இதற்கு முன் கடந்த செப்டம்பரில் ஏற்றுமதி 2.15 சதவீதம் குறைந்து இருந்தது. கடந்த ஜுன் மாதத்தில் இங்கிருந்து  2,501 கோடி டாலருக்கு மட்டுமே (ரூ.1.72 லட்சம் கோடி) பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து 4,029 கோடி டாலருக்கு (ரூ.2.78 லட்சம் கோடி) பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் தங்கம் மட்டும் 270 கோடி டாலருக்கு (ரூ.19 ஆயிரம் கோடி) இறக்குமதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,528 கோடி டாலராக (ரூ.1.05 லட்சம் கோடி) உள்ளது.