கடந்த ஜனவரியில் மட்டும் 3.94 லட்சம் வாகனங்கள் விற்பனை… ஆனாலும் விற்பனை குறைந்து போச்சாம்… சோகத்தில் பஜாஜ் ஆட்டோ….

 

கடந்த ஜனவரியில் மட்டும் 3.94 லட்சம் வாகனங்கள் விற்பனை… ஆனாலும் விற்பனை குறைந்து போச்சாம்… சோகத்தில் பஜாஜ் ஆட்டோ….

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரியில் மொத்தம் 3.94 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்புகளில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரியில் மோட்டோர் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ உள்பட மொத்தம் 3.94 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 3.1 சதவீதம் குறைவாகும். 2019 ஜனவரி மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.07 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் உள்நாட்டில் 1.92 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2019 ஜனவரி மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 2.31 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 1.57 லட்சம் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. 

பஜாஜ் பைக்

2019 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 22.4 சதவீதம் குறைந்துள்ளது. 2019 ஜனவரியில் உள்நாட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2.03 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.