“கஞ்சா விற்பனை” சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரை கைது செய்த போலீசார்!

 

“கஞ்சா விற்பனை” சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரை கைது செய்த போலீசார்!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. மது கிடைக்காத சிலர் இப்போது கஞ்சா பக்கம் திரும்பிவிட்டனர். இந்த ஊரடங்கால் கஞ்சா புழக்கம் அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் கஞ்சா விற்பனைசெய்யப்பட்டு வருவதாகவும் இளைஞர்கள் அங்கு குவிந்து வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் மேற்கொண்ட போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரவீன் (26) என்பவர் தான் காஞ்சா விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பிரவீனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். காவலர் பிரவீன் 6 ஆண்டுகளுக்கு முன்னர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.