கஜா புயல்; முதல்வர் அவசர ஆலோசனை

 

கஜா புயல்; முதல்வர் அவசர ஆலோசனை

கஜா புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை: கஜா புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ”கஜா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது நவம்பர் 15-ம் தேதி கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்,