கஜா புயல்; மத்திய குழு நாளை தமிழகம் வருகை?

 

கஜா புயல்; மத்திய குழு நாளை தமிழகம் வருகை?

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை நிலைகுலைய செய்துள்ளது. அங்கு மக்கள் அனைவரும் உணவு, தண்ணீர், வீடு என அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகிறார்கள். மேற்கூறிய மாவட்டங்களின் வாழ்வாதாரம் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. 

இதற்கிடையே அரசு தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ 1000 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் ஏறத்தாழ டெல்டா மாவட்டங்களின் இழப்பு ரூ 10,000 கோடி என கூறப்படுகிறது.  மேலும் புயல் பாதிப்பு குறித்து கணக்கிட மத்திய குழு தமிழகம் வராமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர், புயல் பாதிப்பு மதிப்பீட்டை கணக்கிட மத்திய குழுவை விரைவில் அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளேன் என்றார். இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.