கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: தம்பிதுரை வலியுறுத்தல்

 

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: தம்பிதுரை வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் தேவையான உதவிகள் கிடைக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

கரூர்: கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் தேவையான உதவிகள் கிடைக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அப்போது தான் தேவையான உதவிகள் கிடைக்கும். அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் பழனிசாமி ஏற்கனவே புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமரை சந்தித்து நிவாரண தொகை கேட்டார். பிரதமரும் அன்றே மத்திய குழுவை அனுப்பி வைத்தார்.கஜா புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினரே கண் கலங்கினார்கள்.ஆகவே நிச்சயம் பிரதமர் தேவையான நிவாரண தொகையினை ஒதுக்குவார் என நம்புகிறோம் என்றார்.