கஜா புயல் பாதிப்பு: 500 பேருக்கு பசுக்கன்றுகளை கொடுத்த ஜி.வி; குவியும் பாராட்டு!

 

கஜா புயல் பாதிப்பு: 500 பேருக்கு பசுக்கன்றுகளை கொடுத்த ஜி.வி; குவியும் பாராட்டு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட  500 நபர்களுக்கு  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பசுக்கன்றுகளை  வழங்கியுள்ளார்.

தஞ்சை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட  500 நபர்களுக்கு  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பசுக்கன்றுகளை  வழங்கியுள்ளார்.

இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.  ஆனால் நடிப்பையும் தாண்டி இவர் பல சமூக அக்கறையான விஷயங்களிலும் செய்து வருகிறார்.
தமிழ் உணர்வு அதிகம் கொண்டுள்ளவராக இருக்கும் ஜி வி பிரகாஷ் ஜல்லிக்கட்டு விவகாரம், நீட் தேர்வு ,  விவசாயிகள் பிரச்சனைகள் என  தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தனது கருத்தையும், ஆதரவையும்  தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கஜா புயலால் பாதித்த டெல்டா மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் செய்த அவர், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புயலால் வீடு, உடைமைகளை இழந்த பெண்கள் 500 பேருக்கு பசுக்கன்றுகளை வழங்கினார். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளையும் உடமைகளையும் இழந்த மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.