கஜா புயல் பாதிப்பு: மூன்றாவது நாளாக களத்தில் உதவும் நடிகர்கள்!

 

கஜா புயல் பாதிப்பு: மூன்றாவது நாளாக களத்தில் உதவும் நடிகர்கள்!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடிகர் பார்த்திபனின் தமிழர் கலை இலக்கிய பணபாட்டுப் பேரவை சார்பில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. 

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடிகர் பார்த்திபனின் தமிழர் கலை இலக்கிய பணபாட்டுப் பேரவை சார்பில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. 

கஜா புயலால் பெரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நிவாரண பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் விமர்சித்தனர். இதனால், நிவாரண உதவிகளை நாங்களே மேற்கொள்கிறோம் என தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் குவிந்துள்ளனர்.

தன்னார்வலர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும், வணிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை டெல்டா மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பார்த்திபனின் தமிழர் கலை இலக்கிய பணபாட்டுப் பேரவை சார்பில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பார்த்திபன், சமுத்திரகனி, அமீர் உள்ளிட்டோர் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “எனதருமை தமிழ் சொந்தங்களே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் ஒரு சிறு துரும்பே! நல்ல உள்ளமும் வசதியும் படைத்தவர்கள்  உங்கள் உதவிகளை விரைவாகச் செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.