கஜா புயல் பாதிப்பு: மீட்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

கஜா புயல் பாதிப்பு:  மீட்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பேரிடர் மேலாண்மை வாரியத்தின் புயல் முன்னேற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீட்புப்பணிகள் குறித்து விமர்சித்துள்ளார்.

சென்னை: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் புயல் முன்னேற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீட்புப்பணிகள் குறித்து விமர்சித்துள்ளார்.

கஜா புயல் தமிழக டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 பேர் புயலால் பலியான நிலையில், வீடுகள், கால்நடைகள், பயிர்கள் ஆகியவற்றைப் பலர் இழந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறிய அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார்

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் தமிழக அரசைப் பாராட்டியிருந்த ஸ்டாலின், தற்போது மீட்பு பணிகளில் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் படுமோசமாக இருப்பதாகவும், குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.