கஜா புயல் பாதிப்பு; மக்கள் மனநிலையில்தான் அரசும் இருக்கிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

 

கஜா புயல் பாதிப்பு; மக்கள் மனநிலையில்தான் அரசும் இருக்கிறது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கஜா புயல் பாதிப்பில் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அதே மனநிலையில்தான் தமிழக அரசும் இருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம்: கஜா புயல் பாதிப்பில் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அதே மனநிலையில்தான் தமிழக அரசும் இருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் தற்போதும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.  நிவாரண முகாம்களில் உணவு, படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் வழங்கப்படும். 

சேத மதிப்பீடு குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசிடம் இழப்பீடு தொகை கேட்கப்படும். பாதிக்கப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தவறான தகவல்கள் பரபப்படுகின்றன. எதிர்பாராத பேரழிவில் அனைத்து துறையும் இணைந்து செயல்படுகின்றன. சில பிரச்னைகள் ஊதி பெரிதாக்கப்படுகின்றது. போக்குவரத்து சரி செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனநிலையில்தான் அரசும் இருந்து வருகிறது என்றார்.