கஜா புயல் பாதிப்பு: களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

 

கஜா புயல் பாதிப்பு: களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப  திரையுலகினரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

mumtaz

அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை வென்ற நடிகை மும்தாஜின் ஆர்மியினர் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று தன்னலம் அறியாது நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளை விநியோகம் செய்தனர். அந்த அட்டைப்பெட்டிகளில் மும்தாஜின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.