கஜா புயல் பாதிப்பு: களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்; குவியும் பாராட்டு!

 

கஜா புயல் பாதிப்பு: களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்; குவியும் பாராட்டு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார்.

நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

daniel

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல் நேரடியாகச் சென்று நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

daniel

தனது நண்பர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து டேனியல் உதவிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.