கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் முதல்வருடன் ஆலோசனை

 

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் முதல்வருடன் ஆலோசனை

கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த நான்கு டெல்டா மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், “கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தோம்; தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களின் சேதங்களை நேரில் பார்த்தோம். அது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் பணிகள் சிறப்பாக உள்ளதாகவும் டேனியல் ரிச்சர்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.