கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியீடு

 

கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியீடு

கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

சென்னை: கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புயலில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர்  தலைமையில் சில தினங்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல் கட்டமாக கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக  தமிழக அரசு கணக்கிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், முதல் கட்டமாக புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து அதனை விடுவித்தற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புயலால் சேதம் அடைந்த  வீடுகளுக்கு ரூ.100 கோடி, பயிர் சேதத்திற்கு ரூ.350 கோடி, உயிரிழப்பு, கால்நடை, உடைமைகளுக்காக ரூ.205.87 கோடி, சாலை, குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு ரூ.102.5 கோடி, மீன்வளம் ரூ.41.63 கோடி, மின்சாரம் ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.