கஜா புயல் நிவாரண பணிக்கு திமுக நிதியுதவி

 

கஜா புயல் நிவாரண பணிக்கு திமுக நிதியுதவி

கஜா புயல் நிவாரண பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ 1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: கஜா புயல் நிவாரண பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ 1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கஜா புயல் அந்த மாவட்டங்களின் வளர்ச்சியை 20 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என அங்கு அங்கு மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், கஜா புயல் நிவாரண பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ 1 கோடி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.