கஜா புயல்: நிவாரணம் வழங்க முன்வந்த ‘காற்றின் மொழி’ டீம்!

 

கஜா புயல்: நிவாரணம் வழங்க முன்வந்த ‘காற்றின் மொழி’ டீம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ‘காற்றின் மொழி’ படக்குழு முன் வந்துள்ளது.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ‘காற்றின் மொழி’ படக்குழு முன் வந்துள்ளது.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்ப படமான ‘காற்றின் மொழி’ படத்தின் தயாரிப்பாளர், நிவாரண நிதி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

kaatrinozhi

கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தமிழகடெல்டாபகுதி மக்களுக்கு, நீங்கள்காற்றின் மொழிதிரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொருகாற்றின் மொழிடிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூ. 2 தமிழக அரசின்கஜாபுயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.