கஜா புயல் நிவாரணம்: ரூ.1146 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு!

 

கஜா புயல் நிவாரணம்: ரூ.1146 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு!

தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக 1146 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி: தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதியாக 1146 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை சரி செய்ய, 15,000 கோடி ரூபாயும், அதில் முதற்கட்டமாக 1500 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. 

அதன்படி, முதற்கட்டமாக ரூ 353.70 கோடி ஒதுக்குவதாகவும், மீதமுள்ள பணத்தை மத்திய குழுவின் ஆய்விற்குப் பின்னர் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே, தமிழகம் வந்த மத்திய குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

rajnath

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 1146.12 கோடி ரூபாயை கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மேலும், முதற்கட்டமாக ரூ.353 கோடியை ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.