கஜா புயல் தாக்கிய 4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டணம் ரத்து: கமல்ஹாசன் பாராட்டு!

 

கஜா புயல் தாக்கிய 4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டணம் ரத்து: கமல்ஹாசன் பாராட்டு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 டெல்டா மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்த எஸ்.ஆர்.எம். குழும உரிமையாளர் பாரிவேந்தருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 டெல்டா மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்த எஸ்.ஆர்.எம். குழும உரிமையாளர் பாரிவேந்தருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கஜா புயலுக்கு தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய மரங்களையும் கஜா புயல் வேரோடு அழித்துச் சென்றுள்ளது. 

இதனால், பொருளாதார ரீதியாக அம்மாவட்ட மக்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். அந்த நஷ்டத்தில் ஓரளவுக்கு பங்கு எடுத்துக் கொள்ளும் விதமாக, பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டத்தைச் சேர்ந்த 650 மாணவ, மாணவிகளுக்கான 4 ஆண்டுகள் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக எஸ்.ஆர்.எம். கல்விக் குழும வேந்தர் அறிவித்துள்ளார். 

pachamuthu

அதன்படி, ரூ.48 கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த செய்தியை கேள்வி பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.எம். வேந்தர் பச்சைமுத்துவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.